< Back
மாநில செய்திகள்
சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:36 AM IST

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருந்த 2 வழக்குகளில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து 4 பவுன் சங்கிலி மற்றும் ஆட்டோவை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சிறப்பாக செயல்பட்ட கோட்டைப்பட்டினம்போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்