
திருவாரூர்
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
திருவாரூர் மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்கம் சார்பில் தேசிய அளவிலான வில்வித்தை பயிற்சி முகாம், மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி திருத்துறைப்பூண்டி சாவித்திரி அம்மாள் நினைவு புல் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரம்பரிய வில்வித்தை சங்க மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் வரவேற்றார். இதில் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு அரிமா சங்க தலைவர் வேதமணி, செயலாளர் சபரிநாதன், பொருளாளர் தினகரன் ஆகியோர் பரிசு வழங்கினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வெற்றி, அருள், குமரகுருபரன், ஸ்ரீராம் ஹரிஹரன், ராகுல் ஆகியோர் செய்திருந்தனர்.