< Back
மாநில செய்திகள்
மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு சான்றிதழ்
கரூர்
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு சான்றிதழ்

தினத்தந்தி
|
31 March 2023 6:46 PM GMT

மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

கரூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எனது கரூர் எனது பெருமை திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து உருவாகும் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி அவற்றை வைத்து வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு பாராட்டு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி துணை பேராசிரியர்கள் நித்யாதேவி, பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதில் உள்ள பல்வேறு முறைகள் குறித்தும், அதன் பராமரிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும், மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விரிவாக எடுத்துரைததனர். தொடர்ந்து மாடுத்தோட்டம் அமைத்த 204 பேருக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும், இயற்கை உரம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்