< Back
மாநில செய்திகள்
வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ்
நாமக்கல்
மாநில செய்திகள்

வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ்

தினத்தந்தி
|
5 July 2022 7:00 PM GMT

வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

அங்கக உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு திறன் மேம்பாட்டு இயக்கம் மூலம் ஊரக வேளாண் இளைஞர்களுக்கு உழவர் பயிற்சி நிலையம் மூலம் அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சிக்கு இணையதளம் வழியாக 15 பேர் பதிவு செய்தனர். இதற்கான பயிற்சி 29.3.2022 தொடங்கி 16.5.2022 வரை 30 நாட்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், துணை வேளாண்மை இயக்குனர்கள், விதை பரிசோதனை நிலையம், மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர்கள், வேளாண் வணிக துறை அலுவலர்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு பயிர் செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கு பெற்று பயிற்சி அளித்தனர்.

சான்றிதழ்கள்

இப்பயிற்சியில் 15 பேரில் 12 பேர் தேர்வு நடத்தப்பட்டு எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் சான்றிதழ்களை வழங்கினார்.

தற்போது பயிற்சி பெற்றவர்கள் அந்தந்த வட்டாரங்களில் மற்ற விவசாயிகளுக்கு, மகளிர் வாழ்வாதார இயக்கம் மற்றும் அட்மா திட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்