< Back
மாநில செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்

நாகை மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல கள்ள நோட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

மேலும் செய்திகள்