< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

தினத்தந்தி
|
3 Aug 2023 1:15 AM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி

காமராஜர் பிறந்த நாளையொட்டி அவர் குறித்த பாடல்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை www.kalviradio.com என்ற இணைய வழி கல்வி வானொலி டெலிகிராம் செயலிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அனுப்பி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற 4 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் காமராஜர் குறித்த பாடல்கள், கவிதைகள், கட்டுரைகளை வழிகாட்டி ஆசிரியை அனுப்பி வைத்தார். இதில் 19 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஆசிரியை கீதா வழங்கி பேசினார். அப்போது இதுபோன்ற போட்டிகள் மூலம் மாணவ-மாணவிகளின் எழுதும் திறன், வாசித்தல் திறன், உச்சரிப்பு திறன் அதிகமாகி தலைமை பண்பு மேலோங்கும் என்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்