< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

எஸ்.வி.மங்கலத்தில் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேராேட்டம் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
6 March 2023 12:15 AM IST

சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேர்த்திருவிழா நடைபெற்றது. குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசி மக தேர்த்திருவிழா நடைபெற்றது. குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

ருத்ரகோடீசுவரர் கோவில்

சிங்கம்புணரி அருகே உள்ள சதுர்வேதமங்கலம் என்று அழைக்கப்படும் எஸ்.வி.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை 5 கோவில்களின் ஒன்று.

இந்த கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழாவில் மண்டகபடிதாரர்கள் சார்பில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து திருக்கல்யாணம், கழுவன் திருவிழா நடந்தது.

தேரோட்டம்

திருவிழாவையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், பிரியாவிடை அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய 4 சப்பர தேர்களும், ஆத்மநாயகி அம்மன்-ருத்ர கோடீஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளினர்.

குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பச்சை கொடி அசைத்து தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரதவீதிகளிலும் தேர் உலா வந்து நிலையை அடைந்தது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எஸ்.வி.மங்கலம் கிராம தந்தை புலவர் காந்தி அம்பலம் முன்னிலை வகித்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சிவகங்கை அறநிலைய துறை மண்டல கமிட்டி சிவாச்சாரியரும், விக்ரமபைரவி ஜோதிடாலயா நிறுவனருமான உமாபதி சிவாச்சாரியார் மற்றும் கோவில் கண்காணிப்பாளர், கோவில் பரம்பரை முதல் ஸ்தானிகர் காளமேகம் பிள்ளை குடும்பத்தினர், காங்கிரஸ் வட்டார தலைவர் ஜெயராமன் குடும்பத்தினர், சிங்கம்புணரி மகாதேவ் நர்சிங் ஹோம் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயகண்ணன், பெண்கள் நல மகப்பேறு சிறப்பு மருத்துவர் மீனா ஜெயகண்ணன் குடும்பத்தினர், சிங்கம்புணரி அம்மன் கிரானைட் டைல்ஸ் உரிமையாளர் சந்துரு, கூட்டுறவு சொசைட்டி பொறுப்பாளர் வையாபுரி செந்தில், சிங்கம்புணரி ஆர்.எம்.எஸ்.குழுமத்தின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் ராஜலெட்சுமி உணவகம் நிறுவனத்தார்கள், எஸ்.எஸ்.குரூப் இன்ஸ்டியூட் ஸ்ரீ சேவுமூர்த்தி மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ். ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.எஸ்.குழுமத்தின் செயலாளர் சந்திரசேகர், தாளாளர் செந்தில் குமார், அ.காளாப்பூர் அருண் காம்ப்ளக்ஸ் ஏ.ஆர்.கே.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நாகராஜன் குடும்பத்தினர், ருத்ர கோடீஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருப்பையா, ஆத்ம நாயகி அம்பாள் கோவில் ஓதுவார் சுப்பிரமணியம் குடும்பத்தினர்,, சிங்கம்புணரி முத்து டிரேடர்ஸ் உரிமையாளர் கா.நீலமேகம், மேலப்பட்டி ஊராட்சி செயலாளர் கே நாகராஜன், சிங்கம்புணரி சோமசுந்தரம் லாட்ஜ் மற்றும் டவர்ஸ் உரிமையாளர் தர்ஷன்கண்ணா மற்றும் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்