< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பேருந்து நிலையத்திற்காக நூற்றாண்டுகள் கடந்த மரங்களை வெட்டக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு
|21 May 2022 5:48 PM IST
திருச்சி பிரதான சாலையில் உள்ள 7 புளிய மரங்களை வெட்ட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது.
சென்னை,
சேலம் மாவட்டம் மல்லூர் பஞ்சாயத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருச்சி பிரதான சாலையில் உள்ள 7 புளிய மரங்களை வெட்ட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் மரங்களை வெட்டாமலேயே பேருந்து நிலையம் கட்ட முடியும் என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மரங்களை வெட்ட அனுமதி வழங்கக் கூடாது என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.