கரூர்
புதிய தார்சாலையை மத்திய குழுவினர் ஆய்வு
|புதிய தார்சாலையை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
தோகைமலை,
தோகைமலை அருகே பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் அழகனாம்பட்டி பிரிவு சாலையில் 2½ கிலோ மீட்டர் தார்சாலை புதிதாக போடப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து அந்த புதிய தார்சாலையை நேற்று தேசிய தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சிங் ராஜேஸ்வர் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தார் சாலையின் தன்மை, அகலம், நிளத்தின் அளவு, கிராவல் மண், ஜல்லி கற்கள், தாரின் அளவு, ஜல்லியில் எடை செய்யப்படும் தார் சாலையின் தடிமன் அளவீடு எவ்வாறு மெட்டல் செய்யப்பட்டது என்றும் தனித்தனியாக ஆய்வு செய்தார். பின்னர் பல்வேறு கோணங்களில் தனித்தனியாக சாலையை கொத்தி எடுத்து பரிசோதனை செய்து பார்த்தனர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர்கள் தமிழப்பன், அழகுராஜா, தோகைமலை உதவி செயற்பொறியாளர்கள் மைதிலி, மலர்கொடி, செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.