< Back
மாநில செய்திகள்
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
19 July 2023 12:16 AM IST

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.

அனைத்து வீடுகளிலும் தற்போதுள்ள மின்சார ரீடிங் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மின் ஊழியர்களின் வேலையிழப்புகள் குறித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை முன்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மின் ஊழியர்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்