< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு வழிபாடு
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 Jan 2023 3:34 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு வழிபாடு செய்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று இரவு வந்தார். அவர் கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் இன்று அதிகாலை கோவிலுக்குள் சென்று சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சத்ருசம்ஹார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்தவிலாச மண்டபத்தில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினார். பின்னர், மீண்டும் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் மற்றும் அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்