< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி் ஆய்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி் ஆய்வு

தினத்தந்தி
|
15 July 2022 12:43 AM IST

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அன்னவாசல் ஒன்றியங்களில் தேசிய கிராமப்புற விவசாய வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் கிராம சேவா சங்கத்தின் மூலம் ஆம்பூர்பட்டி, அவ்வையார் பட்டி மாம்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பல்வேறு கிராமங்களில் நில நீர் திடல் மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட துணை செயலாளர் ரிச்சா குப்தா, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, அறிவியலாளர் சுமன் சின்ஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நில நீர் திடல் மேம்பாட்டு திட்ட மேலாளர் எம்.ஆர்.பழனிச்சாமி, திட்ட வேளாண் அலுவலர் திவ்யலட்சுமி ஆகியோர் திட்ட பணிகள் குறித்து விளக்கினர். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட அலுவலர் சக்திவேல், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்