< Back
மாநில செய்திகள்
குறைகளை மறைக்க மத்திய அரசு மக்களை திசைதிருப்புகிறது - துரை வைகோ குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

'குறைகளை மறைக்க மத்திய அரசு மக்களை திசைதிருப்புகிறது' - துரை வைகோ குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 Sept 2023 10:49 PM IST

இந்தியா கூட்டணியைக் கண்டு ஆளும் கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்தார்.

கோவை,

மத்திய அரசு தங்கள் ஆட்சியில் உள்ள குறைகளை மறைக்கவே பாரத், சனாதனம் போன்ற விஷயங்களை வைத்து மக்களை திசைதிருப்பி வருவதாக ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் குறைபாடுகளையும், தோல்விகளையும் மறைப்பதற்காக மக்களை திசைதிருப்புகிறார்கள்.

'இந்தியா' கூட்டணியின் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதைக் கண்டு ஆளும் கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் மத ரீதியான காழ்ப்புணர்ச்சியை உருவாக்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்