< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'பொது சிவில் சட்டம் மூலம் மக்களை மத்திய அரசு மிரட்டுகிறது' - தி.மு.க. எம்.பி. வில்சன்
|19 July 2023 3:20 PM IST
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், நாட்டின் மத சுதந்திரத்தை அழித்துவிடும் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் கூறினார்.
சென்னை,
மக்களின் தேவையை கவனிக்காமல் தேவையற்ற பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து மக்களை மத்திய அரசு மிரட்டி வருவதாக தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை தி-நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், நாட்டின் மத சுதந்திரத்தை அழித்துவிடும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமக்கு 2024 தான் முக்கியம். ஒவ்வொருவரின் விரலிலும் இந்த நாட்டின் தலையெழுத்து உள்ளது. நீங்கள் அதை உபயோகிக்கவில்லை என்றால் நிச்சயமாக அரசியலமைப்பு சட்டத்தை தலைகீழாக திருப்பிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.