< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது - ஜி.கே. வாசன்
மாநில செய்திகள்

மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது - ஜி.கே. வாசன்

தினத்தந்தி
|
15 Jun 2024 3:45 PM IST

மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,,

மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம்.

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்