< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு
|4 Sept 2023 1:38 AM IST
என்.எல்.சி. மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீரென இறந்தார்.
நெய்வேலி
கர்நாடகா மாநிலம் ரால்சூர் மாவட்டம் அன்வாரி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 58). இவர் என்.எல்.சி.யில் மத்திய பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார். இவர் தற்போது, நெய்வேலி 22-வது வட்டத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று 2-வது அனல் மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமாரசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.