< Back
மாநில செய்திகள்
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு

தினத்தந்தி
|
13 Sept 2022 12:25 AM IST

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு செய்தது.

ராமநத்தம்,

கரையில் விரிசல்

திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் கடந்த 1922-ம் ஆண்டு கட்டப்பட்டது. 16.6 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 29 அடி ஆகும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 67 கிராமங்களில் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நீர்த்தேக்கத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டது. இவை ரூ.29 கோடியே 21 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் கரையில் விரிசல் ஏற்பட்டது. இவையும் ரூ.6 கோடியில் சீரமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டு ரூ.1 கோடியே 80 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய...

இவ்வாறாக நீர்த்தேக்கத்தின் கரையில் விரிசல் ஏற்படுவதும், நிதி ஒதுக்கீடு செய்து அதனை சீரமைப்பதும் வாடிக்கையாகி விட்டது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நீர் கசிவை தடுக்கவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

மத்திய குழு ஆய்வு

இந்த நிலையில் மத்திய அரசு அணை மேம்பாட்டு புரணமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற நீர்வளத்துறை அதிகாரி மிட்டல் தலைமையிலான திருமுறாரி ரத்தினம், ஸ்ரீ வஷ்டவா, ருஸ்தா அலி, திருச்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பர்கத் நிஷா, வெள்ளாறு வடிகால் கோட்ட பொறியாளர் அருணகிரி, செயற்பொறியாளர்கள் வீரலெட்சுமி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்