< Back
மாநில செய்திகள்
சென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
மாநில செய்திகள்

சென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

தினத்தந்தி
|
12 Dec 2023 1:22 AM IST

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் விரிவாக விவாதிக்கின்றனர்.

சென்னை,

மிக்ஜம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த பாதிப்புகளை பார்வையிட 6 உயர் அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கிய அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் தலைமைச் செயலகம் வருகின்றனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கின்றனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய குழுவினர் 2-ஆக பிரிந்து இன்றும், நாளையும் (புதன்கிழமை) வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் கள ஆய்வை முடித்துவிட்டு 14-ந் தேதி காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்