சென்னை
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
|மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து தாம்பரம் பேருந்து நிலையம் முதல் காந்தி சாலை சந்திப்பு வரை ஜி.எஸ்.டி.சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், சலீம் கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல் கான், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், சி.பி.எம் தொகுதி செயலாளர் கிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் முருகன், விடுதலைச்சிறுத்தைகள் தாம்பரம் தொகுதி செயலாளர் செல்சேகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்திய படியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.