< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருமுல்லைவாயல் அருகே கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
|8 Jun 2022 6:01 PM IST
திருமுல்லைவாயல் அருகே கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேடவாக்கம் பூங்கா நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). கால் டாக்சி டிரைவர். இவர் கடந்த 6-ந் தேதி காலை திருவேற்காட்டில் பயணியை இறக்கி விட்டுவிட்டு அயப்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நகர் சந்திப்பில் வந்தபோது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருமுல்லைவாயல் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த கார்த்திக் என்ற ஐயப்பன் (20) மற்றும் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி (20) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.