< Back
மாநில செய்திகள்
செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
20 May 2022 2:13 AM IST

இலையூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் தினசரி அம்பாள் வீதியுலா, கரகாட்டம் ஆகியவை நடைபெற்றது‌. கடந்த 16-ந் தேதி இரவு முத்து பல்லக்கு, கரகாட்டம், வாண வேடிக்கை நடந்தது.கடந்த 17-ந் தேதி மாவிளக்கு பூஜை, அய்யனார் காப்பு அணிவித்தல், சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெற்றது. 18-ந் தேதி காலை 10 மணியளவில் தேர்வடம் பிடித்தல், காளி மற்றும் மயில் காவடி, அலகு குத்தி வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று 2-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில், இலையூர் கிராமத்தை சுற்றியுள்ள வாரியங்காவல், புதுக்குடி, செங்குந்தபுரம், ஜெயங்கொண்டம், மருதூர், குவாகம், தேவனூர், நாகல்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலை வந்தடைகிறது. 22-ந் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்