< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
செல்லாயி அம்மன் கோவில் தேரோட்டம்
|24 Jun 2022 1:49 AM IST
செல்லாயி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் இரவில் சிம்மம், அன்னம், யானை, குதிரை, பூத வாகனங்களிலும், முத்து பல்லக்கிலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் முதல் தேரில் செல்லாயி அம்மனும், 2-வது தேரில் ஓலைப்பிடாரி அம்மனை யும் எழுந்தருளச்செய்து வீதி உலா நடந்தது. தங்களது வீடுகளுக்கு முன்பாக தேர் வந்தபோது செல்லாயி அம்மனுக்கு பூ, பழங்களை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஓலைப்பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலி கொடுத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.