< Back
மாநில செய்திகள்
புழல் சிறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் - போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

புழல் சிறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் - போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

தினத்தந்தி
|
15 March 2024 2:49 AM IST

புழல் சிறையில் கைதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சிறைக்குள் 2 செல்போன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, ஐந்து கைதிகள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள், ஐந்து பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்