< Back
மாநில செய்திகள்
வாலிபர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
மதுரை
மாநில செய்திகள்

வாலிபர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
22 March 2023 2:13 AM IST

வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ரகு (வயது 28). சம்பவத்தன்று மதுரை வந்த இவர் ஆரப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே போன்று புதூர் சூர்யா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (47) கூடல்நகரில் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். ஆலங்குளத்தை சேர்ந்தவர் பெரோஸ்கான் (47). இவரிடம் அண்ணாநகர் குருவிக்காரன் சாலையில் வைத்து செல்போன் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்