< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு
|12 Oct 2023 8:45 PM IST
தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 48). இவர், ஆவடியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வருகிறார். இவர், வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென சிவகுமாரின் சட்டைபையில் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்.
இதேபோல் வியாசர்பாடி பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(52). தனியார் நிறுவன ஊழியரான இவர், கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகே சிட்கோ மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சுரேஷிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்.