< Back
மாநில செய்திகள்
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

தினத்தந்தி
|
6 Sept 2022 9:31 PM IST

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த மக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாத்திமாநகர் பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் கோபுரம் உள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது.

அடுத்தடுத்து 2 செல்போன் கோபுரங்கள் அமைந்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு, முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடியிருப்புக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்