< Back
மாநில செய்திகள்
காரைக்குடியில் செல்போன் கோபுரம் மாயம்
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடியில் செல்போன் கோபுரம் மாயம்

தினத்தந்தி
|
3 April 2023 12:15 AM IST

காரைக்குடி புதுச்சந்தைப்பேட்டை தெற்கு பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் மயமானது.

காரைக்குடி,

காரைக்குடி புதுச்சந்தைப்பேட்டை தெற்கு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் இருந்தது. அதை ஒரு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலிருந்து இந்த செல்போன் கோபுரம் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் செல்போன் கோபுர நிறுவன அதிகாரி தாஜ்மல்ஹான், மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு ஆகியோர் அங்கு சென்று செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்யவந்தனர். அப்போது செல்போன் கோபுரம் மற்றும் அதன் உபகரணங்களை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் மாயமான செல்போன் கோபுரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்