< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
செல்போன் திருடியவர் கைது
|28 Jun 2023 1:14 AM IST
விக்கிரமசிங்கபுரத்தில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் கோமதி பார்வதி நாயகம் (வயது 29). இவர் பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ந் தேதி கோமதி பார்வதி நாயகம் பணம் செலுத்த விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று அங்குள்ள மேஜையில் தனது செல்போனை வைத்தார். பின் பணத்தை செலுத்தி விட்டு திரும்பி வந்து மேஜையில் பார்த்தபோது செல்போனை காணவில்லை.
இதுகுறித்து கோமதி பார்வதி நாயகம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் விக்கிரமசிங்கபுரம் கீழரதவீதியை சேர்ந்த ராஜ சுப்பிரமணியன் (42) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து செல்போனை மீட்டனர்.