< Back
மாநில செய்திகள்
செல்போன் திருடியவர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

செல்போன் திருடியவர் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

சங்கராபுரம் தாலுகா அருளம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கார்த்திக்(வயது 21). இவர், தனது மனைவியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர், காத்திருப்போர் அறையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது அவரது செல்போனை க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சரவணன்(39) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்