< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் செல்போன் திருட்டு
|26 Jan 2023 11:00 AM IST
சென்னை வியாசர்பாடியில் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் செல்போன் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் இமானுவேல் (வயது 19). இவர், ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வியாசர்பாடி ரெயில் நிலையத்துக்கு மாநகர பஸ்சில் (தடம் எண் 64சி) சென்றார். வியாசர்பாடி மூர்த்திங்கர் சாலை அருகே பஸ் வந்தபோது, கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் இமானுவேல் பேண்ட் பையில் வைத்து இருந்த செல்போனை திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.