< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
கடையில் செல்போன் திருட்டு
|23 Aug 2023 5:12 PM IST
கடையில் செல்போன் திருட்டு
அவினாசி
அவினாசியை அடுத்த தெக்கலூர் ஆதித்யா நகரில் கிறிஸ்டோ நிதின் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 6 செல்போன்கள் மற்றும் ரூ.3 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்துசாரித்து வருகின்றனர்
----------------