தேனி
இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
|கம்பத்தில் இனம்பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 28). இவர், கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், பணி முடிந்து உத்தமபாளையம் செல்வதற்காக அரசு போக்குவரத்து பணிமனை பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறிது தூரம் சென்றதும் கண் இமைக்கும் நேரத்தில் சா்மிளா கையில் வைத்திருந்த செல்போனை அந்த வாலிபர்கள் பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சர்மிளா புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச் சேர்ந்த குப்புசின்னு (22), 17 வயது சிறுவன் ஆகியோர், சர்மிளாவிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடு்த்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.