கன்னியாகுமரி
செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
|குறைபாட்டை சுட்டிக்காட்டி செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவை சேர்ந்த மெர்லின் ஜெயபால் என்பவர் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள செல்போன் கடையில் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் ஒரு மாதத்திலேயே பழுதடைந்ததால்,, கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். உடனடியாக பழுது பார்த்து திரும்ப கொடுத்து விட்டார்கள். ஆனால் 10 நாட்களில் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடைக்காரரை அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் இதில் தயாரிப்பு பிரச்சினை உள்ளது என்று திரும்ப கொடுத்து விட்டனர்.
மீண்டும், மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மெர்லின் ஜெயபால் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள செல்போன் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட மெர்லின் ஜெயபாலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
---------