< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

தினத்தந்தி
|
1 Jan 2023 11:05 AM IST

புழல் சிறையில் கைதியிடம் போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.

புழல் தண்டனை சிறையில் 900-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் உயர் பாதுகாப்பு அறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட திருவேற்காடு அழகர்சாமி சாலையை சேர்ந்த ரவிசங்கர்(வயது 52) என்பவரும் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது அறையை சிறை போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து கைதி ரவிசங்கருக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி?, அந்த செல்போனில் இருந்து அவர் யாரிடம் எல்லாம் பேசினார்? என விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்