< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Dec 2022 1:26 PM IST

புழல் சிறையில் கைதியிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புழல் தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஒல்லி சுரேஷ்(வயது 35) என்பவரும் கடந்த 2016-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகன் விஜயன் கொலை வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் நேற்று சிறை போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுரேஷ், செல்போனில் யாருடனோ பேசி கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் கைதிக்கு செல்போன் எப்படி கிடைத்தது?. அவர் யாரிடம் செல்போனில் பேசினார்? என விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்