< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

தினத்தந்தி
|
27 Feb 2023 7:52 AM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிகப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை முன்கூட்டியே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தங்கள் செல்போனை யாரிடம் கொடுத்து செல்வது என்று தெரியாமல் வாக்காளர்கள் தவித்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்