< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
5 May 2023 12:15 AM IST

ஓசூரில் வாலிபரை கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்

வழிப்பறி

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா ரூபனா அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 21). இவர் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆனேக்கல் தாலுகா பல்லூரில் தங்கி உள்ளார். மேலும் உணவு வினியோகிக்கும் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை ஓசூரில் சிப்காட் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த சிலர் ஜெகதீசை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.

3 பேர் கைது

அப்போது ஜெகதீஷ் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து ஓசூர் சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பொம்மசந்திரத்தை சேர்ந்த பிரசன்னா (25), எப்பகோடி பிரஜ்வால் (26), பிரதீப்குமார் (29) ஆகிய 3 பேர் என தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 3 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்