< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு
|12 April 2023 2:26 AM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்தவரை தேடி வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மணப்படை வீடு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவருடைய மகன் அவனிஷ் (வயது 19). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, அவனிஷிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.