< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் மனமுருகி வழிபட்ட பிரபலங்கள்
|9 March 2024 1:10 AM IST
கண்ணீருடன் சிவனை மனமுருகி வழிபட்டார் நடிகர் சந்தானம்.
கோவை,
கோவை ஈஷா யோகா மையத்தில் 30-வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி கடந்ததும் இரண்டாம் கால பூஜை தொடங்கியது. அது லிங்கோத்ர பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது இறை நாமத்தை உச்சரித்தால் நன்மை கிடைக்கும். அந்தவகையில், ஓம் நமச்சிவாய என்று ஜக்கிவாசு தேவ் நாமத்தை உச்சரித்தார். அதனை தொடர்ந்து அங்கிருத்தவர்களும் இறை நாமத்தை உச்சரித்தனர். நமச்சிவாய.. நமச்சிவாய.. எனும் மந்திரத்துடன் தொடர்ந்து பிரார்த்தனையில் தமன்னா,நடிகர் சந்தானம்,நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.