கரூர்
கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஊர்வலம்
எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் அ.தி.மு.க.வினர், மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து மனோகரா கார்னர் ரவுண்டானா வரை ஊர்வலமாக வந்தனர்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தொடர்ந்து மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், மாவட்ட இணைச்செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துகுமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், புகழூர் நகர செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், கரூர் மாநகர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ேதாைகமலை
இதேபோல் தோகைமலை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய சேர்மன் லதா, ஒன்றிய துணை செயலாளர் துரைகவுண்டர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.