கள்ளக்குறிச்சி
மணம்பூண்டியில் அ தி மு க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|மாநிலங்களவை வேட்பாளராக சி வி சண்முகம் அறிவிப்பு மணம்பூண்டியில் அ தி மு க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருக்கோவிலூர்
நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்தை அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இதைதத் தொடர்ந்து திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஆர்.குரு தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டி.தேவனூர் கிளை செயலாளர் கணேசன், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஆறுமுகம், கிளை செயலாளர்கள் சேகர், ஹரிகிருஷ்ணன், காந்தி, முன்னாள் தலைவர் அய்யனார், வீரபாண்டி விஜயகுமார், தர்மலிங்கம், குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, துரை, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.