திண்டுக்கல்
தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|தமிழக பட்ஜெட்டில் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க.வினர் கொண்டாட்டம்
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோபால்பட்டி பஸ்நிறுத்தத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைசெயலாளர் சுந்தரராஜன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், நிர்வாகிகள் ரகுபதி, அழகர்சாமி, வெள்ளைச்சாமி, முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
இதேபோல் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் தி.மு.க. தெற்கு ஒன்றிய பேரூர் சார்பில் தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து ெகாண்டாடினர். பின்னர் பஸ்நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி. சாமிநாதன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வி முருகன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புளியம்பட்டி
பழனி அருகே உள்ள புளியம்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளருமான கா.பொன்ராஜ் தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா சோமு, தி.மு.க. நிர்வாகிகள் கண்ணுச்சாமி, வீரப்பன், சாமிக்கண்ணு, கிருஷ்ணசாமி, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.