< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 12:15 AM IST

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

காவேரிப்பட்டணம்:

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையொட்டி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பையூர் ரவி, கிருஷ்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், நகர செயலாளர்கள் விமல், மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா, மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், பேரூராட்சி உறுப்பினர் அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்