< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தினத்தந்தி
|
20 July 2022 9:18 PM IST

தலைமை அலுவலகம் தொடர்பான தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வருவாய்த் துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்ட வழக்கில் அந்த சீலை உடைத்து அலுவலகத்தின் சாவியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், நகர அவைத்தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர் அறிவாளி, நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, செந்தில்வேல், நாகேந்திரன், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்