கோயம்புத்தூர்
உலக தாய்ப்பால் வார விழா
|உலக தாய்ப்பால் வார விழா
வால்பாறை
வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில், டாக்டர் பாபுலட்சுமண் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து கர்ப்பிணிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் விளக்கினார்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் பகுதி சுகாதார செவிலியர் தேவகி பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் எவ்வாறு கொடுக்க வேண்டும், எவ்வளவு நாட்களுக்கு கொடுக்க வேண்டும், எந்த நிலையில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று விளக்கினார்.
இதேபோன்று ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையங்களிலும் பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், சீரான மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு உறுதி ஆகியவை குறித்து கிராம சுகாதார செவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக எஸ்டேட் பகுதியில் உள்ள வடமாநில பெண் தொழிலாளர்களை கைக்குழந்தையுடன் வரச்செய்து தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை எந்த நிலையில் மார்போடு அணைத்து படுக்க வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.