< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
6 Sept 2023 12:59 AM IST

பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று அரசு விடுமுறை என்பதால் மாவட்டத்தில் உள்ள மழலை, தொடக்க பள்ளிகளில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்து பேசியும், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகள் நடனமாடினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் செய்திகள்