< Back
மாநில செய்திகள்
உலக மகளிர் தினம் கொண்டாட்டம்
கரூர்
மாநில செய்திகள்

உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
10 March 2023 12:20 AM IST

உலக மகளிர் தினம் கொண்டாப்பட்டது.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா காந்தி கல்யாண மண்டபத்தில் ெகாண்டாடப்பட்டது. இதைெயாட்டி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் பெண்கள் மற்றும் பெண் கவுன்சிலர்கள் ஆகியோருக்கு கோலப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

பின்னா் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் வரவேற்று ேபசினார். புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், வேலாயுதம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். விழாவில் பெண் கவுன்சிலர் ஒருவர் பாடல் பாடி அசத்தினார். விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில், வார்டு கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்