< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
|5 March 2023 4:03 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி பஜார் வீதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி ராஜன் தலைமை தாங்கினார், மாவட்ட பிரதிநிதி சி.எம். கதிரவன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.ஜெ. ரத்தீஷ், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை ராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு 500 பேருக்கு சிக்கன் பிரியாணி வாங்கினார்கள்.