< Back
மாநில செய்திகள்
கருணாநிதி பிறந்தநாள் விழாவை அனைத்து கிராமங்களிலும் கொண்டாடுங்கள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள் விழாவை அனைத்து கிராமங்களிலும் கொண்டாடுங்கள்

தினத்தந்தி
|
31 May 2022 11:05 PM IST

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழாவை அனைத்து கிராமங்களிலும் கொண்டாடுங்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ கட்சியினருக்கு வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், முருகன், மடம்.பெருமாள், லியாகத்அலி, மலையரசன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசும்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியேற்றி, இனிப்பு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி, நகர செயலாளர் சுப்ராயலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, நகர துணை செயலாளர் அபுபக்கர், நிர்வாகி அப்துல்ரசாக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்