அரியலூர்
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
|ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகள்
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியினை உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா தேவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இப்போட்டியானது 14, 17, 19, வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
கால்பந்து போட்டி
கால்பந்து ஆண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெயங்கொண்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பாத்திமா மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளி 2-வது இடமும், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தனர்.
கால்பந்து பெண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளி முதலிடமும், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஜெயங்கொண்டம் மாதிரி பள்ளி 2-வது இடத்தையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதலிடமும், உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளி 2-வது இடமும் பெற்றனர்.
கூடைப்பந்து
கூடைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெரியார் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா மெட்ரிக் பள்ளி முதலிடமும், அன்னை தெரசா பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெரியார் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெரியார் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 17 வயதுட்பட்டோர் பிரிவில் பாத்திமா மெட்ரிக் பள்ளி முதலிடமும், அன்னை தெரசா பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெரியார் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், பாத்திமா மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், அன்னை தெரசா பள்ளி 2-வது இடமும் பெற்றுள்ளார்.